எஸ்.எஸ். ராஜமெளலி – மகேஷ்பாபு படத்தில் பிரபல தமிழ் நடிகர் இணைகிறாரா?

பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் ஆகிய மூன்று வெற்றிப் படங்களை தொடர்ந்து, தற்போது மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படத்தை எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி விட்டது என்பதும் அறிந்ததே.

மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் இப்படத்தின் நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார் என்றும், அது மட்டுமின்றி பிரபல மலையாள நடிகர் பிரித்திவிராஜ் சுகுமார் இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், பான் இந்தியத் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் தமிழ் நடிகர் விக்ரம் இணையவிருப்பதாகவும், அவரும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், கன்னட திரை உலகில் இருந்தும் ஒரு பிரபலம் இந்த படத்தில் இணைவார் என்று கூறப்படுவதால், ஒரு நிஜமான பான் இந்தியத் திரைப்படமாக இந்த படம் உருவாகும் என்று எதிர்பார்க்கலாம்.

விக்ரம் ஏற்கனவே தமிழில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நிலையில், ராஜமெளலி படத்தில் அவருக்கு எந்தவிதமான கதாப்பாத்திரம் கொடுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

WATCH OUR LATEST NEWS