பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்: சர்வதேச அமைப்புக்கு ராஜ்நாத் கேள்வி

ஶ்ரீநகர், மே.15-

பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்களை ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி முகமை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா எந்த எல்லைக்கும் செல்வதற்குத் தயாராக உள்ளது. முரட்டுதனமான ஒரு நாட்டிற்கு அணு ஆயுதம் தேவையா? பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பானதா? பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பது குறித்து சர்வதேச அணுசக்தி முகமை பரீசிலனை செய்ய வேண்டும் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில், ஆபரேஷன் சிந்தூர நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்களுடன் சந்திப்பு நடத்தியப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ராஜ்நாத் சிங் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

அணு ஆயுதங்களை வைத்துக் கொண்டு பாகிஸ்தான் அச்சுறுத்துகிறது. பாகிஸ்தானின் அணு ஆயுதக் கிடங்குகளைச் சர்வதேச அணு சக்தி முகமை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS