சட்டவிரோத குடியேறிகளைத் திருப்பி அனுப்புவதற்கான பொது மன்னிப்புத் திட்டம் 2.0 அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டிப்பு: உள்துறை அமைச்சர் அறிவிப்பு

கோலாலம்பூர், மே.16-

மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் அந்நிய நாட்டவர்களை, அவர்களின் தாயகத்திற்குத் திருப்பு அனுப்புவதற்கான பொது மன்னிப்புத் திட்டம் 2.0 அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று அறிவித்துள்ளார்.

இந்த பொது மன்னிப்புத் திட்டம் 2.0, இந்த மே மாதம் 19 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த சட்டவிரோதக் குடியேறிகளைத் திருப்பி அனுப்புவதற்கான பொது மன்னிப்புத் திட்டம் தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவானுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பயண ஆவணங்களின்றி மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்கள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்க, அவர்களே தாங்களாக முன்வந்து, தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கு அனுமதிப்பதே, இந்த பொது மன்னிப்புத் திட்டத்தின் நோக்கமாகும் என்று டத்தோ ஶ்ரீ சைபுஃடின் விளக்கினார்.

சட்டவிரோதக் குறியேறிகளும், / தங்களுக்கு வழங்கப்பட்ட வேலை பெர்மிட் அனுமதி அட்டை நிபந்தனையை மீறி / கூடுதல் காலத்திற்கு தங்கிவிட்ட அந்நிய நாட்டவர்களும், 500 ரிங்கிட் அபராதத் தொகையை செலுத்தி விட்டு, தங்கள் தாயகம் திரும்புவதற்கு இந்த பொது மன்னிப்புத்திட்டம் 2.0 வகை செய்வதாக Datuk Seri Saifuddin தெளிவுபடுத்தினார்.

இன்று புத்ராஜெயாவில் மலேசிய குடிநுழைவுத்துறையின் சிறந்த சேவையாயர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிகழ்விற்கு தலைமையேற்ற போது Datuk Seri Saifuddin இந்த பொது மன்னிப்புத் திட்டம் நீட்டிப்பிற்கான கால அவகாசத்தை அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS