ஆசிரியர்கள் பணியிட மாற்ற விண்ணப்ப நிபந்தனைகளை கல்வி அமைச்சு சற்று தளர்த்தியது

கூச்சிங், மே.16-

ஆசிரியர்களின் பணியிட மாற்ற விண்ணப்பத்திற்கான நிபந்தனைகளை கல்வி அமைச்சு சற்று தளர்த்தியுள்ளதாக அதன் அமைச்சர் பாஃலீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

குறைந்த பட்சம் இரண்டு ஆண்டு கல்விச் சேவையில் இருந்த ஆசிரியர்கள், பணியிட மாற்றம் கேட்டு தற்போது விண்ணப்பிக்க முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த பணியிட மாற்ற விண்ணப்பத்திற்கு 2 ஆண்டு கல்விச் சேவையைத் தவிர வேறு எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படாது என்று பாஃட்லீனா சீடேக் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் நல்வாழ்வு, அவர்களின் தன்னலமற்ற சேவையைக் கருத்தில் கொண்டு, மடானி அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக பாஃட்லீனா சீடேக் குறிப்பிட்டார்.

இன்று 2025 ஆம் ஆண்டிற்கான 54 ஆவது ஆசிரியர் தினத்தையொட்டி, கூச்சிங்கில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆசிரியர் தினக் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றுகையில் பாஃட்லீனா சீடேக் இதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS