பெய்ஜிங், மே.16-
சீனாவில் இன்று காலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். அண்மையில் திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலை மேற்கு சீனாவில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆகப் பதிவாகியிருந்தது. இதனால், கட்டடங்கள் லேசாகக் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
இருப்பினும், அதிகாரிகள் குறைந்த அளவிலான ஆபத்து கொண்ட பச்சை எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இருந்த போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.