பயங்கரவாதிகளுக்கு நிதியளித்த பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங் கூறுகிறார்

ஆமதாபாத், மே.16-

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் அரசு நிதி அளித்துள்ளது என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் ரூ.14 கோடி நிதி அளித்துள்ளது. பயங்கரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் நிதி கொடுத்துள்ளது. இப்படி தொடர்ந்து பாகிஸ்தான் அரசு உதவி செய்து வருகிறது. 

அங்குள்ள பயங்கரவாதிகளை முழுமையாக அழிக்கும் வரை இந்தியா ஓயாது. பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் கைகளில் சிக்கும் அபாயம் உள்ளது. சர்வதேச செலாவணி நிதியம் கொடுத்த நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வழங்கி உள்ளது. அப்படி நிதி கொடுப்பதை பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும். 

ராணுவ வீரர்களின் கண்காணிப்பின் கீழ் இந்திய எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. இன்னும் தொடர்கிறது. நேரம் வரும்போது ஆபரேஷன் சிந்தூரின் முழு வடிவத்தை உலகம் பார்க்கும் என ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். 

WATCH OUR LATEST NEWS