கோலாலம்பூர், மே.16-
பிறப்புப் பத்திர விண்ணப்பத்திற்கு தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன்னிடம் பொய்யான தகவல்களை வழங்கியதாக குற்றத்தை ஒப்புக் கொண்ட அறுவருக்கு கோலாலம்பூரில் உள்ள வெவ்வேறு நீதிமன்றங்கள் தலா 500 ரிங்கிட் முதல் 2 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதித்தது.
56 க்கும் 71 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அறுவரும் மாஜிஸ்திரேட் எஸ். மகேஸ்வரி உட்பட ஆறு மாஜிஸ்திரேட்டுகளின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அந்த அறுவருக்கும் ஒரு வார காலம் முதல் மூன்று மாதம் வரை சிறைத்தண்டனை விதிப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.