மலேசியாவில் சீனர்களிடையே பிறப்பு விகிதம் குறைந்து வருவது உள்ளூர் அரசியல் நிலப்பரப்பில் அவர்களின் சமூகத்தின் நிலையை அடிப்படையில் மாற்றக்கூடும் என்று மசீச மகளிர் பிரிவு கவலை தெரிவித்துள்ளது.
புள்ளி விவரத் துறையின் சமீபத்திய தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 7,350 சீனக் குழந்தைகள் மட்டுமே பிறந்தன. 8.6 சதவீதம் குறைந்திருப்பது, மலேசிய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
சீன சமூகம், ஒரு மக்கள் தொகையில் சமூக மற்றும் கலாச்சார ரீதியாக நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதற்கு கடுமையான எச்சரிக்கையின் அறிகுறியே இதுவாகும் என்கிறார் மசீச. மகளிர் பிரிவுத் தலைவி வோங் யூ போஃங்.
இந்தப் போக்கு தொடருமானால், சொந்த நாட்டிலேயே சீனர்கள், ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மையினராக மாறுவதற்கான உண்மையானச் சாத்தியத்தையும் எதிர்கொள்ள நேரிடும்.
குறிப்பாக அரசியல் பிரதிநிதித்துவம், பொருளாதாரச் செல்வாக்கு மற்றும் கலாச்சாரக் கூறுகளைக் குறைந்த பிறப்பு விகிதம், பலவீனப்படுத்தி விடும் என்று வோங் யூ போஃங் எச்சரிக்கிறார்.