கிளானா ஜெயா, மே.17-
மனித வள அமைச்சின் கீழ் உள்ள மலேசிய இந்தியர் திறன் மேம்பாட்டு முன்னெடுப்பான மிஸியின் ( MISI ) ஏற்பாட்டில் இந்திய இளையோர்களுக்காக “AI POWERED PHOTOGRAPHY AND VISUAL EDITING” எனும் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் சிறப்பாக நடந்தேறியது.
மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் பெரும் முயற்சியுடன் தொடங்கப்பட்ட மிஸியின் திறன் மேம்பாட்டுத் திட்ட பயிற்சித் திட்டங்களில் ஒன்றான “AI POWERED PHOTOGRAPHY AND VISUAL EDITING” சிலாங்கூர், பூசாட் பண்டார் கிளான ஜெயா, டத்தாரான் கிலோமாக்கில் நடைபெற்றது. இதில் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த 28 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
வெற்றிகரமாகத் தங்கள் பயிற்சியை முடித்துக் கொண்ட 28 பேருக்கும் நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மிஸியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்மணி லெட்சுமணன் முன்னிலையில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
AI தொழில்நுட்ப மூலம் புகைப்படம் எடுத்தல் மற்றும் காட்சிகள் தணிக்கைச் செய்தல் எனும் இந்தப் பயிற்சியில் செயற்கை நுண்ணறிவு திறனில் புதைந்திருக்கும் பல தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பைத் தங்களுக்கு ஏற்படுத்தித் தந்த மனித வள அமைச்சின் மிஸிக்கு பங்கேற்பாளர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.