34 ஆயிரம் சட்டவிரோதக் குடியேறிகள் கைது

கோலாலம்பூர், மே.17-

சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக மலேசிய குடிநுழைத்துறை தொடங்கியுள்ள ஓப் கூதிப் சோதனை நடவடிக்கையில் கடந்த மே 15 ஆம் தேதி வரை 34 ஆயிரத்து 615 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறையின் துணைத் தலைமை இயக்குநர் ஜாஃப்ரி எம்போக் தாஹா தெரிவித்தார்.

இந்த மொத்த எண்ணிக்கையில் 15 ஆயிரத்து 422 பேர் நாட்டின் பிரதான குடிநுழைவு வாயிலில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குடிநுழைவுத்துறை இதுவரையில் ஐந்து ஆயிரத்து 90 சோதனைகளை நாடு தழுவிய நிலையில் நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS