கஸான், மே.17-
மாஸ்கோவிலிருந்து கோலாலம்பூருக்கு நேரடி விமானச் சேவையை வழங்குவதற்கு ரஷ்யா மிகுந்த ஆர்வமாக உள்ளது என்று அதன் போக்குவரத்து துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் முன்னணி நகரான கஸானில் நடைபெற்ற ரஷ்யாவின் 16 ஆவது அனைத்துலகப் பொருளாதார ஆய்வரங்கில் அந்த நாட்டின் போக்குவரத்துத் துணை அமைச்சர் விளாடிமிர் பொதேஷ்கின் இதனை அறிவித்துள்ளார்.
கோலாலம்பூருக்கு நேரடி விமானச் சேவையை மேற்கொள்வது குறித்து மலேசியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையை நோக்கமாகக் கொண்டு, கோலாலம்பூருக்கு விமானச் சேவையைத் தொடங்க ரஷ்யா ஆர்வமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.