பட்டர்வொர்த், மே.17-
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட கடும் நோய்கள் பினாங்கு மக்களிடையே அதிகரித்து வருவது குறித்து மாநில அரசாங்கம் தனது அச்சத்தைத் தெரிவித்துள்ளது.
மக்களிடையே அதிகரித்து வரும் இத்தகைய நாள்பட்ட நோய்களினால் பினாங்கின் மேம்பாட்டு வெற்றியுடன் இரண்டறக் கலந்த பினாங் லீட்ஸ் எனும் பினாங்கு முன்னணித் தோற்றம் பாதிக்கப்படுவதாக மாநில முதலாமைச்சர் சோவ் கொன் யோவ் தெரிவித்தார்.
எல்லா நிலைகளிலும் பினாங்கு, ஒரு முன்னணி மாநிலமாகத் திகழ வேண்டும் என்று நாம் விரும்பினாலும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் குறித்த புள்ளி விவரங்களில் அது முன்னணியில் இருக்கக்கூடாது என்று சோவ் கொன் யோவ் வலியுறுத்தினார்.