பிகேஆர் தேர்தலில் பண அரசில் தொடர்புடைய புகார்கள் இல்லை

ஜார்ஜ்டவுன், மே.17-

தற்போது நடைபெற்று வரும் பிகேஆர் தேர்தலில் பண அரசியல் தொடர்பாக எந்தவோர் அதிகாரப்பூர்வமான புகாரையும் கட்சிப் பெறவில்லை என்று மத்தியச் செயலவை உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பிகேஆர் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் பண அரசியல் நடத்தப்படுவதாக கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி தனது அச்சத்தைத் தெரிவித்து இருப்பது குறித்து பதில் அளிக்கையில் சைஃபுடின் மேற்கண்டவாறு கூறினார்.

வாக்குகளை வாங்குவது அல்லது விற்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் எந்தவொரு புகாரையும் பெறவில்லை என்று சைஃபுடின் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS