லாரி ஓட்டுனரை மன்னிப்பதாகக் கூறுகிறார் உயிரிழந்த வீரரின் மனைவி

கோப்பேங், மே.18-

தெலுக் இந்தான் அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த மத்தியக் கலகத் தடுப்புப் படை வீரர் கோப்ரல் அமிருடின் ஸப்ரியின் மனைவி நோராஸியான் முகமட் ஜோனெட், இந்த சம்பவத்தில் தொடர்புடைய லாரி ஓட்டுநரை மன்னித்ததாகக் கூறியுள்ளார். விபத்து விதிப்படியே நடந்தது என்று நம்புவதால் அவர் ஓட்டுநரைக் குறை கூறவில்லை. தனது இல்லத்தில் நடைபெற்ற பிடிபிடிஎன்னின் ஸியாரா காசி திட்டத்தின் போது அவர் கண்ணீருடன் இதைக் கூறினார். கோப்ரல் அமிருடின் பணியின் போது இறப்பது பெருமை என்று முன்பு பேசியதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். மேலும், கடவுள் ஒருவரின் நேரத்தை நிர்ணயித்து விட்டால், ஒரு நிமிடம் கூட தாமதமாகாது என்றும் அவர் கூறியதாக நோராஸியான் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS