ஈப்போ, மே.18-
இன்று காலை ஈப்போ, கம்போங் தெபிங் திங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் 61 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பேரா தீயணைப்பு – மீட்புத் துறையின் உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் கூறுகையில், அதிகாலை 3 மணியளவில் தீயணைப்பு நடவடிக்கை முடிந்ததும், அவ்வீட்டின் சமையலறைப் பகுதியில் இருந்து முதியவரின் உடல் மீட்கப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்காக சடலம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.