இயக்குனர் மணிரத்தினம் எப்போதும் வித்தியாசமாக படங்களை இயக்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சரித்திரக் கதை அமைப்பைக் கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களையும் இயக்கிய மணிரத்னம், அதன்பின் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்த அதிரடி ஆக்ஷன் படமான ‘தக்லைஃப்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை அடிப்படையாகக் கொண்டதாகவும், கிட்டத்தட்ட ‘ஓகே கண்மணி’ போன்ற கதை அம்சம் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்பாடம் உருவாக இருப்பதாகவும், பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி நாயகனாக இதில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
‘தக்லைஃப்’ படம் வெளியாகியவுடன், இந்த புதிய படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கும் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் நாயகியாக நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, நடந்த ஒரு விழாவில், “நான் சாய் பல்லவி ரசிகன்” என்று மணிரத்னம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.