முன்னணி கிரிக்கெட் வீரர் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்க விரும்பும் சிம்பு

நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன் உடன் தக் லைப் படத்தில் நடித்து இருக்கிறார். அதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் கமல், சிம்பு, மணிரத்னம், த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிம்பு இதற்கு முன் நடித்த பத்து தல படத்தில் வரும் ‘நீ சிங்கம் தான்’ பாடல் தனது பேவரைட் என்றும், அதை அதிகம் கேட்டு வருவதாகவும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி அண்மையில் கூறி இருந்தார்.

இந்நிலையில் அது பற்றிய கேள்விக்கு பதில் சொன்ன சிம்பு, தான் விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்புவதாகக் கூறி இருக்கிறார்.சிம்பு விரும்புவதும் நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

WATCH OUR LATEST NEWS