கோலாலம்பூர், மே.18-
இந்த ஆண்டு பொது உயர்க்கல்விக் கூடங்களில் உயர் கல்வி தொடர விரும்பும் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் அதற்கு இணையான தகுதி பெற்ற மாணவர்களிடமிருந்து யுபியுஆன்லைன் அமைப்பு மூலம் 3இலட்சத்து 28 ஆயிரத்து 800 விண்ணப்பங்களை உயர்க்கல்வி அமைச்சு பெற்றுள்ளது. 2025/2026 கல்வியாண்டு, எஸ்பிஎம் முடித்த விண்ணப்பதாரர்களுக்கு 349 தேர்வுகளும், எஸ்டிபிஎம் முடித்த விண்ணப்பதாரர்களுக்கு 1,132 தேர்வுகளும் யுபியுஆன்லைன் அமைப்பு மூலம் வழங்கப்படுகின்றதாக உயர்க்கல்வித் துறையின் மாணவர் சேர்க்கைப் பிரிவின் இயக்குநர் முகமட் நஜிப் முகமட் சாரிஃப் தெரிவித்தார்.
சமீபத்திய தரவுகளின்படி, மிக அதிகமாக, வணிகவியல் டிப்ளோமாவுக்கு 52 ஆயிரத்து 341 விண்ணப்பங்களும், அதைத் தொடர்ந்து கணக்கியல் டிப்ளோமாவுக்கு 43 ஆயிரத்து 182 விண்ணப்பங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. தொழில்நுட்பம், பொறியியல் துறைகளிலும் கணிசமான எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக முகமட் நஜிப் மேலும் குறிப்பிட்டார்.