லஞ்சம் பெற்றதாக உயர் போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு

கோத்தா பாரு, மே.19-

தன்னுடைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும், அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கும் தொடர்ந்து லஞ்சம் பெற்று வந்தததாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், இன்று கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தில் பொது அமைதி மற்றும் பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரியான ஏஎஸ்பி. முகமட் பிஃர்டாவுஸ் முகமட் என்பவரே நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஆவார்.

40 வயதான ஏஎஸ்பி முகமட் பிஃர்டாவுஸ், மொத்தம் 13 ஆயிரத்து 500 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக அவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

கடந்த 2018 ஆம் ஆண்டில் மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவராக பணியாற்றிய காலத்தில், அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS