ஜார்ஜ்டவுன், மே.19-
57 நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரியினால், பினாங்கு கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்துள்ளார்.
பினாங்கு மாநிலம், இயல்பாகவே மென்பொருள் உற்பத்திக்குப் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்த நாடு இறக்குமதி வரியை அதிகரித்து இருப்பது, மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பினாங்கு மாநில மின்னியல் தொழிற்சாலைகள் பெரும் பாதிப்புக்கு இலக்காகலாம் என்று சோவ் கோன் யோவ் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநிலத்திற்கு அமெரிக்கா, இரண்டாவது முக்கிய வர்த்தக சகாவாகும். கடந்த 2023 ஆம் ஆண்டில் 76 பில்லியன் அல்லது 7 ஆயிரத்து 600 கோடி ரிங்கிட் மதிப்புள்ள மென்பொருட்களை அமெரிக்காவிற்கு பினாங்கு ஏற்றுமதி செய்து இருப்பதாக முதலமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இதற்கு ஒட்டுமொத்த நிலையில் 17 விழுக்காடு வரியைப் பினாங்கு செலுத்தியிருப்பதாக அவர் விளக்கினார்.