இஸ்கண்டார் புத்ரி, மே.19-
ஜோகூர் மாநிலத்தில் முஸ்லிம் தம்பதியிரிடையே விவகாரத்துச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் பாஃரேட் முகமட் காலிட் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் 6 ஆயிரத்து 844 ஆக இருந்த விவகாரத்து விண்ணப்பங்கள், கடந்த ஆண்டில் 7 ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புரிந்துணர்வின்மை, நிதிப் பிரச்னை, பொறுப்பற்றச் செயல், மூன்றாம் தரப்பு தலையீடு முதலிய காரணங்களினால் ஜோகூர் மாநில முஸ்லிம் தம்பதியிரிடையே விவகாரத்து அதிகரித்து வருவதாக மாநில சட்டமன்றக்கூட்டத்தில் முகமட் பாஃரேட் தெரிவித்தார்.