ஷா ஆலாம், மே.19-
சிலாங்கூர், செகின்சான் கடற்பகுதியில் அனுமதியின்றி நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலை மலேசிய ரோந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.20 மணியளவில் தடுத்து நிறுத்தப்பட்ட அந்தக் கப்பல் லைபீரியாவில் பதிவு செய்யப்பட்டதாகும்.
அந்தக் கப்பலை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அந்தக் கப்பல் செகின்சான் பகுதியில் நங்கூரமிடுவதற்கு அனுமதிப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
கப்பலில் ரஷ்யாவைச் சேர்ந்த 44 வயது கேப்டனும், 22 முதல் 50 வயதுடைய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 23 கடலோடிகள் இருந்தனர். அவர்களிடம் முறையான பயணப் பத்திரங்கள் இருந்ததாக கேப்டன் மாரிடிம் அப்துல் முஹைமின் முகமட் சால்லே தெரிவித்தார்.