காஜாங், மே.19-
லோரியிலிருந்து பலகைகள் சரிந்து, கார் ஒன்றின் மீது விழுந்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளியின் உள்ளடக்கம் உண்மையே என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யுசோப் இன்று உறுதிப்படுத்தினார்.
இந்தச் சம்பவம் கடந்த மே 12 ஆம் தேதி, பழைய காஜாங் சாலையில் நிகழ்ந்தது என்று அவர் குறிப்பிட்டார். இதில் 34 வயது லோரி ஓட்டுநரும், காரைச் செலுத்திய 22 வயது பெண்ணும் காயம் அடையவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பலகைகளை ஏற்றியிருந்த அந்த லோரி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்த்திசையில் நுழைந்தது. அப்போது லோரியிலிருந்து பலகைகள் சரிந்து, கார் மீது விழுந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்து கடந்த மே 13 ஆம் தேதி போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.