சாய் தன்ஷிகாவுடன் திருமணம் – நடிகர் விஷால் அறிவிப்பு

நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய போவதாக நடிகர் விஷால் அறிவித்திருக்கிறார். “யோகிடா’ என்ற படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய போகிறேன் என்பதை இங்கே அறிவிக்க விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய சாய் தன்ஷிகா, ‘ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாகவும், எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி’ என்றும் குறிப்பிட்டார்.

விஷாலுக்கு 47 வயதாகிறது. தன்ஷிகாவுக்கு வயது 35 ஆகும்.

WATCH OUR LATEST NEWS