கோத்தா கினபாலு, மே.20-
சபா, கோத்தா கினபாலு, கம்போங் பூலாவ் பெனம்பாங்கில் நிகழ்ந்த தீ விபத்தில் பாட்டியும், பேத்தியும் கருகி மாண்டனர்.
இன்று அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தீயின் மத்தியில் தப்பிக்க இயலாமல் 82 வயது பாட்டியும், அவரின் 14 வயது பேத்தியும் மாண்டதாக கோத்தா கினாபாலு தீயணைப்பு நிலையத் தலைவர் ஓர்டின் கிலூ தெரிவித்தார்.
இவ்விபத்தில் அந்த மூதாட்டியின் வீடு முற்றாக அழிந்தது. கார் ஒன்றும் சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.