புத்ராஜெயா, மே.20-
நாள்பட்ட, கடும் நோய்கள் கொண்ட வயது முதிர்ந்தவர்கள் இலவச இன்ஃபுளுவென்சா தடுப்பூசியை உடனடியாகச் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இதுவரை, 65.16 விழுக்காடு முதியவர்களுக்கு இன்ஃபுளுவென்சா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 56,237 பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட கையிருப்பு உள்ளது எனவும் அமைச்சு கூறியது. எனவே, இந்த ஆகஸ்ட் மாத இறுதி வரை அரசு சுகாதார நிலையங்களில் வயது முதிர்ந்தவர்கள் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம். மைசெஜாத்ரா செயலி மூலமாகவோ அல்லது அருகிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்யலாம்.