புதுடெல்லி, மே.21-
இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரப் போக்கைக் கொண்டுள்ளது என்றால் பாகிஸ்தான் பின்னணியில் சீனா இருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
பாகிஸ்தானுக்குப் போர் விமானங்கள், தற்காப்பு உதவிகள் மற்றும் சாட்டிலை உதவிகள் போன்றவற்றை சீனா வழங்கி வருவதாக இந்தி பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ஆய்வு குழு இவ்விவகாரத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
மே மாதம் முற்பகுதியில் இந்தியாவிற்கு எதிராகப் பாகிஸ்தான் நடத்தியத் தாக்குலில் சீனாவின் மறைமுக உதவிகள் மிக ஆழமாக இருந்துள்ளன என்று அந்தக் குழுவினர் கூறுகின்றனர்.
சாட்டிலைட், ராடார் போர் விமானங்களுக்கான தற்காப்பு உதவிகள் முதலியவற்றை மிகக் கனகச்சிதமாக பாகிஸ்தானுக்கு சீனா மிக ரகசியமாக வழங்கியுள்ளது என்றும் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து துணிச்சலாக வாலாட்டுகிறது என்றால் பின்னணியில் சீனா உள்ளது என்றும் இந்தியா போர் வியூக ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் அஷோக் குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.