சுபாங் ஜெயா, மே.21-
பூச்சோங்கில் கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் 29 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த 7 வயது சிறுமி, உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 12.30 மணியளவில் நிகழ்ந்ததாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் பைஃருஸ் ஜாபாஃர் தெரிவித்தார்.
அந்தச் சிறுமி கடுமையானக் காயங்களுடன் ஐந்தாவது மாடியின் தரையில் தலைக் குப்புறக் கிடந்தார் என்று அவர் குறிப்பிட்டார்.
அந்தச் சிறுமியின் தந்தை வேலைக்குச் சென்றிருந்த வேளையில் மற்றொரு குழந்தையை அவரின் தாயார் கவனித்துக் கொண்டு இருந்த வேளையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று முகமட் பைஃருஸ் தெரிவித்தார்.
அந்தச் சிறுமியைக் கவனித்துக் கொண்ட பணியாளர் ஒருவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை விரைவில் தயாராகும் என்று அவர் மேலும் கூறினார்.