ஆபரேஷன் சிந்தூரின் போது பயங்கரவாதிகள் முயற்சித் தகர்ப்பு

புதுடெல்லி, மே.21-

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, காஷ்மீருக்குள் 50 பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். தைரியமிக்க வீரர்கள் பாகிஸ்தானுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தினர். ஏராளமான பயங்கரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் எல்லையில் காத்திருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்தது. கடந்த 8 ம் தேதி, இதனைக் கண்டறிந்து அவர்களைக் தடுக்கத் தயார் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எல்லையில் 40 – 50 பயங்கரவாதிகள் காத்திருந்தனர். அவர்கள் இந்திய எல்லையை நோக்கி வந்தனர். சூழ்நிலையை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு எதிர்பார்த்தது போலவே பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து பயங்கரவாதிகள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இது அனைத்தும் 1.5 மணி நேரத்தில் நடந்து முடிந்தது.

ஆண் வீரர்களுக்கு நிகராக பெண் வீரர்களும் பணியாற்றி வருகின்றனர். அவர்களை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று இந்திய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS