போலீஸ் துறையின் முன்னாள் தலைமை நிதி பெண் குமாஸ்தா மீது மோசடிக் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மே.21-

கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் முன்னாள் நிதித்துறைத் தலைமை பெண் குமாஸ்தாவிற்கு எதிராக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

41 வயது மிஸாதூல் ஹாபிஃஸா முகமட் என்ற அந்த முன்னாள் தலைமை பெண் குமாஸ்தா, அரசாங்கத்தின் ரசீதைப் போல போலி ரசீதுகளைப் பயன்படுத்தி, 63 ஆயிரத்து 923 ரிங்கிட் 20 காசை மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

நீதிபதி அஸ்ருல் டாருஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த முன்னாள் குமாஸ்தா, கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு மார்ச் மாதம் வரையில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, பண மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS