மாட்ரிட், மே.22-
ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து அணிகளுக்கு இடையிலான யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதியாட்டம் ஸ்பெயினில் உள்ள சென் மாமிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், மான்செஸ்டர் யுனைடட் – டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் களமிறங்கின.
விறுவிறுப்பாக நடைபெற்ற அவ்வாட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் வெற்றி பெற்றது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பா லீக் கிண்ணத்தை டோட்டன்ஹாம் அணி கைப்பற்றியது. ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ஜான்சன் அடித்த கோல் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு வெற்றியை ஈட்டித் தந்தது.