கோலாலம்பூர், மே.22-
நாட்டின் முதலாவது பெண் தலைமை நீதிபதி என்ற பெருமை பெறும் துன் தெங்கு மைமூன் துவான் மாட், பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இது குறித்து விரிவான தகவல் எதனையும் வெளியிடாத பிரதமர், மைமூனின் பதவிக் காலம் நீட்டிப்பது குறித்து தற்போது மிக விரிவாக ஆரயாப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
66 வயதான மைமூனின் பதவிக் காலம் வரும் ஜுன் 30 ஆம் தேதி முடிவடைகிறது.