கோலாலம்பூர், மே.22-
கோலாலம்பூரில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஆசியான் மற்றும் விரிகுடா – சீனா ஒத்துழைப்பு மன்ற உச்சநிலை மாநாட்டில் சீனப் பிரதமர் லீ கியாங் பங்கேற்கவிருக்கிறார்.
2025 ஆம் ஆண்டின் ஆசியானுக்கு தலைமையேற்று இருப்பவர் என்ற முறையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று சீனப் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
சீனப் பிரதமர் வரும் மே 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 3 தினங்களுக்கு மலேசியாவில் இருப்பார் என்று சீன வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.