புத்ராஜெயா, மே.22-
மர்மமான முறையில் காணாமல் போன வர்த்தகப் பெண்மணி பமேலா லிங், எஸ்பிஆர்எம் விசாரணையில் ஒரு சந்தேக நபர் அல்ல என்று அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெளிவுபடுத்தினார்.
கடந்த ஏப்ரல் மாதம் கோலாலம்பூர், செராஸிலிருந்து புத்ராஜெயா, எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்குச் செல்லும் வழியில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 42 வயது பமேலா, லஞ்ச ஊழல் தொடர்பில் எஸ்பிஆர்எம் நடத்தி வரும் புலன் விசாரணைக்கு உதவுவதற்கு ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டார் என்று அஸாம் பாக்கி தெளிவுபடுத்தினார்.
அதே வேளையில் எஸ்பிஆர்எம் விசாரணையின் போது பமேலா லிங் முழு ஒத்துழைப்பு அளித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பமேலா காணாமல் போனது தொடர்பில் அவரின் கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.