கோலாலம்பூர், மே.22-
16 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்பிஆர்எம் விசாரணைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட ஓர் அரசியல்வாதியின் உதவியாளரான தியோ பெங் ஹோக் மரணத்தில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று சட்டத்துறை அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டில் தியோ பெங் ஹோக் மரணம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையை மீண்டும் மீள் ஆய்வு செய்ததில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது என்று சட்டத்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.