புத்ராஜெயா, மே.22-
முன்னாள் நிதி அமைச்சரும், துன் மகாதீர் முகமதுவின் பால்ய நண்பருமான காலஞ்சென்ற துன் டாயிம் ஜைனுதீன் மற்றும் அவரின் குடும்பத்திற்குச் சொந்தமான 200 கோடி ரிங்கிட்டுக்கும் அதிகமான சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பரிந்துரை செய்துள்ளது.
அந்த சொத்துக்கள் எவ்வாறு பெறப்பட்டது, அவை ஏன் அறிவிக்கப்படவில்லை என்பதற்கு இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை. அந்த சொத்துக்கள் துன் டாயிம், அவரின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமானவை என்று கூறப்படுகிறது.
கேள்விக்குரியாக இருக்கும் சொத்துக்கள் குறித்து முறையாக அறிவிக்கப்படவில்லை என்பது உண்மையானால் எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.
துன் டாயிம் மறைந்து விட்டாலும் அந்த சொத்துக்களைப் பறிமுதல் செய்யப்படுவதற்கானத் திக்கை நோக்கி எஸ்பிஆர்எம் நகர்ந்து கொண்டு இருப்பதாக அவர் விளக்கினார்.