ஜோகூர் பாரு, மே.22-
பிகேஆர் கட்சியின் உயர் மட்டப் பதவிகளுக்கான தேர்தலில் பிரச்சாரம் இன்று முடிவடையும் நிலையில் நடைபெறவிருக்கும் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குத் தாம் வெற்றி பெற்றாலும், வெற்றி பெறாவிட்டாலும் கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி எப்போதுமே தனது நண்பர்தான் என்று நூருல் இஸா அறிவித்துள்ளார்.
துணைத் தலைவர் பதவிக்கு ரஃபிஸியை எதிர்த்துப் போட்டியிடும் நூருல் இஸா, இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்து உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரஃபிஸி, முன்பிலிருந்து எனது நல்ல நண்பர் ஆவார். இந்த நட்பு கடைசி வரை தொடரும் என்று நூருல் இஸா குறிப்பிட்டார்.