ஜெயிலர் 2 படப்பிடிப்பு எப்போது நிறைவடைகிறது?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. 

கூலி படத்தை முடித்த கையோடு ரஜினி தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பாலகிருஷ்ணா நடிப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படப்பிடிப்பு நன்றாக சென்றுகொண்டு இருக்கிறது. படப்பிடிப்பு நிறைவு பெற டிசம்பர் மாதம் ஆகலாம் எனக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS