ஆபாசக் குறுந்தகவல், சமூக ஊடகப் பிரபலம் கைது

கோலாலம்பூர், மே.23-

14 வயது பெண்ணுக்கு ஆபாசத் தன்மையில் குறுந்தகவலை அனுப்பி வைத்ததாக நம்பப்படும் சமூக ஊடகப் பிரபலத்தைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சிஇஓ பத்து என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பிரபலமாக விளங்கும் அந்த நபருக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து அந்த நபரை கோம்பாக் மாவட்ட போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் தாம், போலீசாரால் தேடப்பட்டு வருவதாகக் கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து 22 வயதுடைய அந்த ஆடவர் கோம்பாக் மாவட்ட போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

அந்த இளைஞர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக போலீஸ் தகவல் கூறுகிறது.

WATCH OUR LATEST NEWS