மலாக்கா, மே.23-
15 ஆண்டுகளுக்கு முன்பு ஆபாச விசிடி படங்களை விற்பனை செய்ததாக நபர் ஒருவர், மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
43 வயது முகமட் பைஃஸி அப்துல்லா என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் நூர் அபிஃகா ரதியா ஸைனுரின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை 5 மணியளவில் மலாக்கா தெங்கா மாவட்டத்திற்கு உட்பட்ட தாமான் டேசா தமிங் சாரி, சுங்கை ஊடாங்கில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.