குயிசூ, மே.23
சீனாவின் குயிசூ மாகாணத்தின் இரு வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளில் இருவர் பலியாயினர். 19 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மண் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என ஐயுறப்படுகிறது. சாங்க்ஷி மற்றும் குவோவா ஆகிய பகுதிகளில் அதிகாலை 3 மணி மற்றும் 8 மணியளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் ராணுவம் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.