கால்பந்து செய்தியாளர்கள் சங்க விருது: மூன்றாவது முறையாக வென்றார் சாலா

இங்கிலாந்து, மே.23-

FWA எனும் கால்பந்து செய்தியாளர்கள் சங்க விருதை லிவர்பூல் கோல மன்னன் முகமட் சாலா மூன்றாவது முறையாக வென்றுள்ளார். ஆர்செனல் அணியின் முன்னாள் வீரரான தியரி ஹென்றிக்குப் பிறகு மூன்றாம் முறையாக அவ்விருதைப் பெற்ற இரண்டாவது ஆட்டக்காரராக சாலா திகழ்கிறார்.

ஓர் எகிப்தியரான சாலா இப்பருவத்தில் இதுவரை 28 கோல்களை அடித்துள்ளார். அதே சமயம் பிரிமியர் லீக்கில் அதிக கோல் போட்டவர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். 2017 ஆம் ஆண்டு லிவர்பூலில் இணைந்ததில் இருந்து அவர் இரு முறை இபிஎல் கிண்ணத்தை வெல்ல அவ்வணிக்கு உதவியிருக்கிறார்.

இந்நிலையில் கால்பந்து செய்தியாளர்கள் சங்கத்தின் விருதை வென்றுள்ளது தமக்கு அர்த்தமுள்ள ஒன்றாக இருப்பதாக சாலா குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS