நடிகை மீனாட்சி சவுத்ரி அடுத்து நடிக்கவிருக்கும் தமிழ்ப்படம்

மிஸ் இந்தியா பட்டம் வென்று அதன் பின் தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் விஜய் ஜோடியாக கோட் படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார். 

அதைத் தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார். இது மட்டுமின்றி, தமிழில் இவர் ‘கொலை’, ‘சிங்கப்பூர் சலூன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தமிழில் அடுத்து நடிக்கப் போகும் படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

அதாவது, விக்ரமின் 63 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மீனாட்சி சவுத்ரி கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

WATCH OUR LATEST NEWS