ஜோகூர் பாரு, மே.24-
பெட்ரோல் ரோன் 95 விலை உயர்த்தப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதி அளித்துள்ளார். தற்போது லிட்டருக்கு 2 ரிங்கிட் 5 காசுக்கு விற்கப்படும் பெட்ரோல் ரோன் 95, தொடர்ந்து விலை நிறுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
பெட்ரோல் ரோன் 95 விலையை உயர்த்தும்படி அமைச்சரவையில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அதனைத் தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று இன்று ஜோகூர் பாருவில் நடைபெற்று வரும் பிகேஆர் மாநாட்டில் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.