ஜோகூர் பாரு, மே.24-
வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களில் குறைந்தது 40 விழுக்காட்டினர் பெண்கள் மற்றும் இளையோர்களாக இருக்க வேண்டும் என்று பிகேஆர் விரும்புவதாக அதன் துணைத் தலைவர் நூருல் இஸா தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற பிகேஆர் மாநாட்டில் வரையப்பட்டுள்ள 3 முக்கிய விவகாரங்களில் இந்த வேட்பாளர்கள் விவகாரமும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக இந்த 24 மாதங்களில் பெண்கள் மற்றும் இளையோர்களின் குரலுக்கு பிகேஆர் செவிசாய்க்க வேண்டும் என்று மாநாட்டுக்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நூருல் இஸா இதனைத் தெரிவித்தார்.