மந்தின், மே.25-
பாஜம் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளிக்கு 70 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள கணினிகளும் தொலில்நுட்பச் சாதனங்களை வாங்க போக்குவரத்து அமைச்சரும் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோனி லோக் நிதியுதவியை வழங்கியுள்ளார்.
அதனை அமைச்சர் அந்தோணி லோக் சார்பில் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அருள் குமார் ஜம்புநாதன் அப்பள்ளிக்கு வழங்கினார்.

ஆரம்பப் பள்ளியில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வியானது மாணவர்களுக்குக் கற்றலைத் தனிப்பயனாக்கி, அவர்களின் ஆர்வத்தைத் தூண்டி, சிக்கலைத் தீர்க்கும் திறன்களை வளர்க்க உதவும். இது ஆசிரியர்களுக்குக் கற்பித்தலை மேம்படுத்தி, நிர்வாகப் பணிகளைக் குறைத்து, மாணவர்களின் தனிப்பட்ட தேவைகளில் கவனம் செலுத்த உதவும். இதன் மூலம், எதிர்காலச் சவால்களைச் சந்திக்கத் தேவையான தொழில்நுட்ப அறிவையும், படைப்புத் திறனையும் ஆரம்பத்திலேயே மாணவர்களுக்கு வழங்க முடியும் என அருள் குமார் தமதுரையில் குறிப்பிட்டார்.
