ஜார்ஜ்டவுன், மே.25-
கடந்த செவ்வாய்க்கிழமை பெற்றோர்களால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சிறுமியின் மிக நெருங்கிய உறவினர்களைக் கண்டறியும் பணியில் உள்ளது பினாங்கு மாநில சமூக நலத்துறை. பெற்றோர்கள் இன்னும் காவல்துறைக் காவலில் இருப்பதாலும், வழக்கு விசாரணையில் இருப்பதாலும், குழந்தையை நெருங்கிய உறவினர்கள் கவனித்துக் கொள்ள இந்தத் தேடல் நடத்தப்படுகிறது. நெருங்கிய உறவினர்கள் யாரும் முன்வந்து குழந்தையைக் கவனித்துக் கொள்ள விரும்பவில்லை என்றால், 12 வயதுடைய அந்தச் சிறுமி சமூக நலத்துறையின் மேற்பார்வையின் கீழ் ஒரு பராமரிப்பு மையத்தில் சேர்க்கப்படுவார் என்று பினாங்கு மாநில சமூக நலத்துறையின் இயக்குநர் ஸாகாரியா தையிப் தெரிவித்தார்.