டென்னிஸ்: ஜோக்கோவிச் சாதனை

ஜெனிவா, மே.25-

செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோக்கோவிச் ஜெனிவா பொது டென்னிஸ் போட்டியில் வாகை சூடியுள்ளார். அதன் வழி அவர் நூறாவது ஏடிபி பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் ஜிம்மி கார்னர்ஸ், சுவிர்சலாந்தின் ரோஜர் பெஃடரர் ஆகியோருக்கு அடுத்து நூறாவது ஏடிபி பட்டத்தைக் கைப்பற்றிய வீரராக ஜோக்கோவிச் திகழ்கிறார்.

ஜெனிவா டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் ஜோக்கோவிச் ஹூபெர்ட் ஹுர்காட்சுடன் களமிறங்கினார். முதல் செட்டில் தோல்வி கண்டாலும், அடுத்த இரு செட்களில் அவர் வெற்றி பெற்றார்.

38 வயதான ஜோக்கோவிச் கடந்தாண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS