புத்ராஜெயா, மே.25-
வறுமை ஒழிப்பு, பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை ஆசியானின் வளர்ச்சி நிரலின் முக்கியத் தூண்களாகக் கருத வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். பொருளாதார வளர்ச்சியானது, மக்கள் நலன், சமூகப் பாதுகாப்பு, மனித மாண்பு ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
வறுமை ஒழிப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் மைய இலக்காகக் கொண்ட ஆசியான் 2025 தொடர்பான கோலாலம்பூர் பிரகடனம், இந்தத் துறைகளில் உத்வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஆசியான் தலைவர்களை வலியுறுத்துகிறது. ஆசியான் 2040, அதற்குப் பிறகு ஆசியானின் வெற்றியானது, நல்லாட்சி, ஆழமான ஒருங்கிணைப்பு, கூட்டு நடவடிக்கை ஆகியவற்றைப் பொறுத்தது என்றும் அன்வார் தெரிவித்தார்.