கோலாலம்பூர், மே.26-
தொழில்துறை நீதிமன்றத் தலைவராக ஒங் வாய் லியோங் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் ஐந்து ஆண்டு காலப் பதவிக் காலம், வரும் 2029 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மனித அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மலேசிய தொழில்துறை நீதிமன்றத் தலைவராக ஒங் வாய் லியோங் பொறுப்பில் இருந்து வருகிறார்.
ஒங் வாய் லியோங்கின் தொழில்முறை நேர்மை மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவரின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தனது சேவைக் காலத்தில் ஆயிரத்து 161 தொழில்துறை வழக்குகளை ஒங் வாய் லியோங் கையாண்டுள்ளார். இவற்றில் ஆயிரத்து 60 வழக்குகளுக்கு வெற்றிகரமானத் தீர்வு கண்டுள்ளார்.
ஒங் வாய் லியோங்கின் அபரிமிதச் சேவையை மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.